இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

உசைன் போல்டையே விஞ்சிய வேகத்தில் ஓடிய மனித ரோபோவுக்கு நேர்ந்த சோகம்! #ViralVideo

சீனாவில், உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (World Humanoid Robot Games) நடைபெற இருக்கிறது. 51 வகையான போட்டிகள் நடைபெறும் இந்த தொடரில், 16 நாடுகளைச் சேர்ந்த 666 குழுக்களுடைய 2,000-க்கும் மேற்பட்ட மனித உருவ ரோபோக்கள் (Humanoid Robots) களமிறங்குகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியைப் பரிசோதிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் மனிதர்களின் அன்றாடப் பணிகளுக்கு ரோபோக்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு, இப்போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதையொட்டி, போட்டிக்கு முன்னோடியாக மனித உருவ ரோபோ ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் கலந்துகொண்டு அதிவேகமாக ஓடிய யூனிட்ரீ (Unitree) நிறுவனத்தின் 'H1' வகை மனித உருவ ரோபோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய அதிர்ச்சியில் ரோபோவின் இடுப்புப் பகுதி மடிந்து, உடற்பகுதியிலிருந்து பொறிகள் (sparks) பறந்தவாறு கீழே விழுந்து பலத்த சேதமடைந்தது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அது பல மில்லியன் பார்வைகளைப் பெற்று வைரலானது. நெட்டிசன்கள் சிலர் ’ரோபோவின் உயிர் பிரிந்தது’ என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆதாரம் Puthiya Thalaimurai https://www.puthiyathalaimurai.com/world/china-beijing-runs-too-fast-games-robot-accident

Share Facebook X WhatsApp Telegram