இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

விருதுநகர் மாவட்டத்தில் 8,711 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு: ஆட்சியாளர் சுகபுத்ரா தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 8,711 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியாளர் சுகபுத்ரா தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியாளர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் ஆட்சியாளர் சுகபுத்ரா 16 விவசாயிகளுக்கு கணினி திருத்த பட்டாக்களை வழங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை ஆட்சியாளரிடம் தெரிவித்தனர். மேலும், கடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் சுகபுத்ரா பேசியதாவது:

விவசாயிகளுக்கு 2024–2025 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஊக்கத் தொகைகள் அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. இதேபோல, இந்த ஆண்டுக்கான கரும்பு ஊக்கத் தொகை அரசாணை பெறப்பட்டவுடன் உடனடியாக வழங்கப்படும். விவசாயிகளுக்கான அடங்கல் சான்றிதழை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க வனத்துறை, விவசாயிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

மேலும், அரசின் மூலம் கூடுதலான கண்மாய்களைத் தூர்வாருவதற்கான நடவடிக்கை, மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுதல், மழைநீரை முழுமையாக சேமிக்க வரத்துக் கால்வாய்களைத் தூர்வாருதல், பொது இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தனியார் பங்களிப்புடன் அகற்றுதல், மின் கம்பங்களை மாற்றுவது குறித்த மனுக்களுக்கு தீர்வு காணுதல், சாலைப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவற்றை உரியவரிடம் திரும்ப ஒப்படைத்தல் உள்பட விவசாயிகளின் பல கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்தில் 3,826.7 மெட்ரிக் டன் யூரியா, 1,927.4 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 269.2 மெட்ரிக் டன் பொட்டாசு, 2,330.1 மெட்ரிக் டன் கலப்பு உரம், 357.4 மெட்ரிக் டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக 8,711 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்தக் கூட்டத்தில் மேகமலை புலிகள் காப்பகம் (ஸ்ரீவில்லிபுத்தூர்) துணை இயக்குநர் ரவிமீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ரா. ஆனந்தி, வேளாண்மை இணை இயக்குநர் மோகன்தாஸ் சௌமியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் திருப்பதி உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாரம் Dinamani https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2026/Aug/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D8711-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%

Share Facebook X WhatsApp Telegram