போரில் தோல்வியடைந்த அமெரிக்கா, அதை மறைப்பதற்காகவே இப்போது "பொருளாதாரப் போர்" என்ற பெயரில் புதிய நாடகத்தை ஆடுகிறது என ஈரான் கேலி செய்துள்ளது. ஈரானுக்கு வணிக அல்லது நிதி உதவி வழங்கும் நாடுகளுக்கு எதிராக "மிகக் கொடூரமான பொருளாதார நடவடிக்கை" எடுக்கப்படும் என்றும், அது ஒப்பிட முடியாத அளவிலான பொருளாதாரத் தனிமைப்படுத்தல் போர் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
அவரது இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் வரலாறு காணாத கடன் மற்றும் வட்டிச் செலவுகள் குறித்த கவனத்தைத் திசை திருப்புவதற்கான ஒரு முயற்சி என்று ஈரான் விமர்சித்துள்ளது.
ஈரான் மீது மீண்டும் ஒரு போர் தொடுக்கப்பட்டால், முந்தைய போர்களை விட அதிநவீன, அதிக துல்லியமும் தொலைதூரப் பாயும் திறனும் கொண்ட "மிகக் கொடூரமான" ஏவுகணை போர்க்கப்பல்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என ஈரானிய புரட்சிகரப் படை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெபி எச்சரித்துள்ளார்.