இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

பெண்களுக்கான இட ஒதுக்கீடு, உயர் தொகுதி மறுசீரமைப்பு அவசியம்: தமிழிசை சௌந்தரராஜன்

பெண்களுக்கான இடஒதுக்கீடு, மக்களவைப் பிரதிநிதித்துவம் உயருவதற்கு தொகுதி மறுசீரமைப்பு அவசியம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும், மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவமும் உயருவதற்கு தொகுதிகள் மறுசீரமைப்பு அவசியம். தொகுதிகள் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் ஏறத்தாழ 200 பெண்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் ஏற்படும்.

எனவே, மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவ சதவீதம் எந்த விதத்திலும் குறையாது என மத்திய அரசு அறிவித்திருப்பதை ஏற்று, இந்த விவகாரத்தை மேலும் அரசியலாக்காமல், தொகுதிகள் மறுசீரமைப்புக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகளுக்கு தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். மாநில அமைச்சர்கள் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு, பணிகளைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். ஆன்மிக நகரான மதுரையின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும். வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்களின் மாநில உரிமைகளை பாஜக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. தமிழகத்தின் காவிரி நீர் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

திமுகவைப் போல, தவெகவுடன் பாஜக மோதல் போக்கை கடைப்பிடிக்காது. அதேநேரத்தில், அவர்கள் எப்படி அணுகுகிறார்களோ, அதேபோன்ற அணுகுமுறையையே பாஜகவும் பின்பற்றும் என்றார் அவர்.

ஆதாரம் Dinamani https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2026/Aug/22/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE

Share Facebook X WhatsApp Telegram