பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் அடியாலா சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இம்ரான் கானின் உடல் நிலை குறித்து பலவிதமான தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு சிறப்பு மருத்துவச் சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இம்ரான் கானை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு பரிசோதனை செய்து, அவர் மருத்துவரீதியாக நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டது.
அத்துடன், அவர் மருத்துவமனையில் இருப்பதைவிட சிறையில் இருப்பதுதான் பாதுகாப்பானது என மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, அவர் மீண்டும் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2023, ஆகஸ்ட் மாதம் முதல் அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார்.