இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தார் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன?

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தார் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன?

தமிழகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தார் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன? என்பதற்கான காரணங்களைக் குறித்து மாநில உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த வேளாங்கண்ணி ஜோசப் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை காமராஜார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராகப் பணிபுரிந்த எஸ். முத்தையாவின் நியமனம் சட்டவிரோதமானது. மேலும், முத்தையா இந்தப் பதவிக்கு உரிய தகுதிகளைப் பெற்றிருக்கவில்லை. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காமராஜார் பல்கலைக்கழகத்தின் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் முன்வைத்த வாதம்:

மதுரை காமராஜார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக தற்காலிக அடிப்படையில் மட்டுமே எஸ். முத்தையா நியமிக்கப்பட்டார். இந்தப் பதவிக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் உள்ளன. மேலும், நிரந்தரப் பதிவாளர் நியமனத்துக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நிரந்தரப் பதிவாளரை நியமிக்கும் நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் சுமார் 14 பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக துணைவேந்தார் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன? என்பது குறித்தும் இதற்கான காரணங்கள் குறித்தும் மாநில உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றார் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாரம் Dinamani https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2026/Aug/22/why-do-vice-chancellor-posts-in-universities-remain-unfilled

Share Facebook X WhatsApp Telegram