இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கள்ளக்கடல் எச்சரிக்கை நீக்கப்பட்ட நிலையில், தனுஷ்கோடிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் வெள்ளிக்கிழமை அனுமதித்தனர்.

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கள்ளக்கடல் சீற்ற நிகழ்வு புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறக் கூடும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம்–தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை புதன்கிழமை காலை மூடப்பட்டது. மேலும், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, தனுஷ்கோடிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால், புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் குறைந்து காணப்பட்டதால், தனுஷ்கோடிக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்லவும், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவும் போலீசார் அனுமதி வழங்கினர்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாரம் Dinamani https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2026/Aug/22/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF

Share Facebook X WhatsApp Telegram