இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

சிதம்பரேசுவரர், சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம்

சிதம்பரேசுவரர், சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேசுவரர் கோயிலில் சிதம்பரேசுவரர், சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேசுவரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்பாள்.

இந்த கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 3-ஆம் திருவிழாவான வெள்ளிக்கிழமை சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விழாவில் ராஜபாளையம், அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாரம் Dinamani https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2026/Aug/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

Share Facebook X WhatsApp Telegram