உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு நடத்திய சரமாரியான தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்; பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன.
குடியிருப்புகள், கிடங்குகள், பள்ளிகள், குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்தத் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்தன.
உக்ரேனிய வான்படை, ரஷ்யா ஏவிய ட்ரோன்களில் சுமார் 90 விழுக்காட்டை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்குத் தேவையான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உரிய நேரத்தில் வழங்கத் தவறியதே இந்த உயிர் இழப்புகளுக்கு முக்கியக் காரணம் என்றும், இது போரின் மிகக் கொடூரமானத் தாக்குதல்களில் ஒன்று என்றும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார்.
ட்ரோன் பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இராணுவச் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் தளவாட மையங்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.