சிவகாசியில் இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சிவகாசி நேரு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி (64), கட்டடத் தொழிலாளி. அவர் தனது சைக்கிளில் திருத்தங்கல்–சிவகாசி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, தனது குடியிருப்பு பகுதியை அடைந்ததும் சைக்கிளைத் திருப்பினார். அப்போது, அந்த வழியில் வந்த இரு சக்கர வாகனம் அவரது சைக்கிளில் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை உடனே சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து (32) என்பவரைக் கைது செய்தனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.