இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

வங்கியில் அடமானமாக வைக்கப்பட்ட 2,179 கிராம் தங்க நகைகள் மோசடி..!

சென்னை அயனாவரத்தில் உள்ள IOB வங்கிக் கிளையில் 21 வாடிக்கையாளர்கள் அடமானமாக வைத்த சுமார் 2 ஆயிரத்து 179 கிராம் தங்க நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்து, சுமார் 3 கோடியே 9 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக உதவி மேலாளர் பொட்னூரு முரளிகிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.

வங்கியில் இருந்து எடுத்துச் சென்ற அசல் தங்க நகைகளை வேறு இடங்களில் அடமானம் வைத்துப் பெற்ற பணத்தை ஆன்லைன் விளையாட்டு மற்றும் சொந்த செலவுகளுக்கு அவர் பயன்படுத்திக்கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/districtnews/fraud-involving-2179-grams-of-gold-jewellery-pledged-at-a-bank-12405221

Share Facebook X WhatsApp Telegram