லார் கிப்பான் குரங்கு விவகாரத்தில் பெருந்துறை தொழில் அதிபர் கேசவநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கி ஈரோடு அமர்வு நீதிமன்ற நீதிபதி ஷமீனா உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோவால் பெருந்துறையைச் சேர்ந்த தொழில் அதிபர் கேசவநாதனின் பண்ணையில் வனத்துறை நடத்திய சோதனையில் விதிளை மீறி ((லார் கிப்பான் குரங்குகள் மட்டுமன்றி)) செர்வால் பூனைகள், 2 வெளிநாட்டு குரங்குகள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் முன் ஜாமீன் கோரி கேசவநாதன் தாக்கல் செய்த மனு ஈரோடு அமர்வு நீதிமன்ற நீதிபதி ஷமீனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.