திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன. குறிப்பாக, திருக்கண்டீஸ்வரம், தூத்துக்குடி, சன்னாநல்லூர், ஆண்டிப்பந்தல், பனங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குருவை நெற்பயிர்கள் மழை காரணமாக சாய்ந்தன.
தொடர்ந்து வயலில் தேங்கிய மழை நீரில் தற்போது நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. மும்முனை மின்சாரம் பற்றாக்குறை, எல் நினோ போன்ற இயற்கை மாற்றத்தால் அதிகரித்த கோடை வெயில் இவற்றால் ஏற்பட்ட வறட்சி உள்ளிட்ட நெருக்கடிகளை சந்தித்து நெல் சாகுபடியை செய்து முடிக்க ஏக்கருக்கு 25,000 முதல் 30,000 வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யவிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைத்திருப்பதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.