இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

மழையால் மேடவாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்

சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 மாலை 11:34

மேடவாக்கம்: மேடவாக்கத்தில் நேற்று மாலை பெய்த மழையால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையின் சில பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. அதன்படி, பள்ளிக்கரணையில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகம் முதல் மேடவாக்கம் கூட்டு சந்திப்பு சாலை வரை சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

இதனால், மேடவாக்கம் மேம்பாலம் மற்றும் அதன் அணுகுசாலையில் 2 கிமீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து சீரமைக்க போலீசார் இல்லாததால், அலுவலகம் சென்று திரும்பியோர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும், சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலையும் ஏற்பட்டது.

ஆதாரம் Dinamalar https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-chennai/traffic-jams-due-to-rain/4301713

Share Facebook X WhatsApp Telegram