இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி 94ஆவது வயதில் காலமானார்

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 94. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பரிசோதனை நடைபெற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அது பலனின்றி வெள்ளிக்கிழமை பிற்பகலில் காலமானார்.

1950ஆம் ஆண்டு செளகார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஜானகி, அதன்பின்னர், செளகார் என்ற சிறப்பு பெயரோடு சேர்த்து செளகார் ஜானகி என அழைக்கப்பட்டார்.

1952-இல் வளையாபதி திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ்த் திரையுலகில் செளகார் ஜானகி அறிமுகமானார்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் செளகார் ஜானகி நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை செளகார் ஜானகி பெற்றுள்ளார்.

தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், தில்லுமுல்லு, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்கள் செளகார் ஜானகிக்கு பெரும் புகழை சேர்த்தன.

2020-ஆம் ஆண்டில், செளகார் ஜானகி தனது 400-ஆவது திரைப்படமான சந்தானத்தின் ''பிஸ்கோத்'' படத்தில் நடித்திருந்தார்.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/cinemanews/veteran-actress-sowcar-janaki-passes-away-12403953

Share Facebook X WhatsApp Telegram