இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சூப்பர் கார்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு..!

இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் நகரில் உள்ள ராயல் ஷாலிமார் ஹோட்டல் அருகே திருமண நிகழ்வு நடைபெற்ற வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இச்சம்பவத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி, மெக்லாரன், ஃபெராரி, ரேஞ்ச் ரோவர் போன்ற சொகுசு மற்றும் சூப்பர் கார்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

கறுப்பு நிற உடை அணிந்த மூன்று நபர்கள், ஹோட்டலுக்கு வெளியே உள்ள சாலையில் சுற்றித் திரிவதும், அவர்களில் ஒருவர் கார்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிவிட்டு தப்பிச் செல்வதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் குறித்தும், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமண நிகழ்வில் 500 விருந்தினர்கள் கலந்துகொண்ட நிலையில், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/worldnews/petrol-bombs-hurled-at-supercars-worth-several-crores-12404547

Share Facebook X WhatsApp Telegram