இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர்களான பெங்களூரு தம்பதியின் குழந்தைக்கு உதவி..!

பெங்களூரு தம்பதியின் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகளை நடிகர் சிம்பு செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர்களான பெங்களூரு தம்பதியின் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான போதிய பணம் இல்லாததால், தங்களது குழந்தைக்கு உதவுமாறு சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வீடியோ நடிகர் சிம்புவின் கவனத்திற்கு சென்ற நிலையில், குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை அவர் செய்து கொடுத்துள்ளார்.

தங்களது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவிய நடிகர் சிம்புவுக்கு அந்த தம்பதியினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் Polimer News https://www.polimernews.com/cinemanews/help-extended-to-bengaluru-couples-child-who-are-ardent-fans-of-actor-simbu-12402817

Share Facebook X WhatsApp Telegram