வெளிநாடுகளில் உள்ளது போன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்றும் அதனால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் படித்துவிட்டு வெளிநாட்டில் சென்று வேலை செய்யும் இளைஞர்கள், இந்த செயற்கை நுண்ணறிவு நகரம் அமைக்கப்பட்டால் இங்கு வந்து பணிபுரிவார்கள் என்றார்.