இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் பிணை கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 7 பேர் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அப்போது, மனுதாரர் தரப்பில், குதிரை பேர் வழக்கில் பிணை பெற்று விடுதலையான நாளில், மனுதாரர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாரம் Dinamani https://www.dinamani.com/tamilnadu/2026/Aug/22/bail-plea-in-tasmac-irregularities-case-court-orders-police-to-file-a-response

Share Facebook X WhatsApp Telegram