சென்னையை அடுத்த திருவேற்காட்டில், வீட்டில் தனியாக இருந்த பெண் தூய்மை பணியாளரை, தலையணையால் முகத்தை அழுத்திக் கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆகாஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். ஆகாஷுக்கும் பெண் தூய்மை பணியாளரான ஹேமாவதிக்கும் அண்மையில் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவர் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு ஆகாஷ் கொலை செய்ததாக கூறப்படுகிறது.