இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

சிமென்ட் சாலை பணி அமைச்சர் ராஜவேலு துவக்கி வைப்பு

சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 மாலை 11:34

நெட்டப்பாக்கம்: பனையடிக்குப்பம் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார்.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியின் பனையடிக்குப்பம் ஒத்தவாடை தெருவிற்கு ரூ. 12.78 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணியினை அமைச்சர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதேபோல், ரூ. 20 லட்சம் செலவில் கரையாம்புத்தூர் கிருஷ்ணா நகர், கணபதி நகரில் சாலை அமைக்கும் பணிகளையும், கரையாம்புத்தூர் பேட் சாலைகளின் மேம்பாட்டு பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

ஆதாரம் Dinamalar https://www.dinamalar.com/news/puducherry/cement-road-works-minister-inaugurates/4301721

Share Facebook X WhatsApp Telegram