இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

சலவை தொழிலாளர்களுக்கு 5% உள் இட ஒதுக்கீடு கோரிக்கை

சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 மாலை 11:52

புதுச்சேரி: சலவை தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ராஜகுலத்தோர் நல சங்கத்தின் சார்பில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

வண்ணார் சாதியின் பெயரை 'ராஜகுல' சாதி என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும். மேலும், சலவை தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு மற்றும் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானமாக அரசு நிறைவேற்ற வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

அப்போது, சங்கத்தின் தலைவர் ஆறுமுகம், செயலாளர் முத்தாபலராமன், துணைத் தலைவர் வரதன் ஆகியோர் முதல்வருடன் இருந்தனர்.

ஆதாரம் Dinamalar https://www.dinamalar.com/news/puducherry/demand-for-internal-quota-for-laundry-workers/4301727

Share Facebook X WhatsApp Telegram