இன்றைய தேதி | AegonEyes இப்போது எங்களைப் பற்றி தொடர்பு தனியுரிமை Newsroom
BREAKING உலகத்தை தமிழில் பாருங்கள் — முக்கிய செய்திகள் உடனுக்குடன்...

குத்தகை நிலம் ஆக்கிரமிப்பு; முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார்

குத்தகை நிலம் ஆக்கிரமிப்பு; முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார்

சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 மாலை 11:30

கிருஷ்ணராயபுரம்: கரூர், ஆண்டாங்கோவிலை சேர்ந்த 67 வயது காமராஜ், நேற்று கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், “கரூர் செங்குந்தபுரம் சின்னசாமி மற்றும் அவரது மகன் ரமேஷுக்கு சொந்தமான, ஈரோடு சாலை, ரெட்டிபாளையத்தில் உள்ள 1.15 ஏக்கர் நிலத்தை நான் 2024 ஏப்ரல் 4 முதல் குத்தகைக்கு எடுத்துள்ளேன். ஆனால், கிருஷ்ணராயபுரம் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், இந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளார். ஆகஸ்ட் 12, 2019-இல் அந்த இடத்தில் வாரச்சந்தை அமைத்து, பல லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். மேலும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, குத்தகை இடத்தை எனக்கு மீட்டுத் தரவேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் கூறுகையில், “அரசியல் காரணங்களுக்காக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, என் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சட்டரீதியாக நான் சந்திப்பேன்” என்றார்.

ஆதாரம் Dinamalar https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-karur/tenancy-land-encroachment-complaint-against-majhi-/4301711

Share Facebook X WhatsApp Telegram