சென்னை மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த கூடுதல் துணை ஆணையர் கொடிச்செல்வம் என்பவர், லஞ்சப் புகாரில் நெல்லை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் வணிகரை மிரட்டி 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பரங்கிமலை ஆய்வாளர் புஹாரி, வேளச்சேரி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக கொடிச் செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.