சென்னையில் காணாமல் போன 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 192 செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் தொலைந்து போன செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அந்த நிகழ்வில் பேசிய சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் பிரின்சி, "செல்போன் தொலைந்தால் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை; CEIR தளத்தில் புகாரைப் பதிவு செய்தாலே போதும் — சைபர் கிரைம் போலீஸார் அந்த செல்போனைக் கண்டுபிடித்து விடுவோம்" என்றார்.