கல்லைப் போட்டுத் தாயைக் கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது
சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 மாலை 11:27
திருச்செந்தூர்: ஓய்வு பெற்ற பேராசிரியை ரேணுகா (63) என்பவரைத் தலையில் அம்மி கல்லைப் போட்டுக் கொலை செய்த அவரது மகன் தங்கபாலன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அன்புமணி. இவரது மனைவி ரேணுகா, அரசு உதவி பெறும் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியை. இவரது மகன் தங்கபாலன் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு ரேணுகாவும், தங்கபாலனும் வீட்டில் இருந்தபோது, திடீரென கோபமடைந்த தங்கபாலன், அம்மி கல்லை தாயின் தலையில் போட்டு அவரைக் கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ரேணுகாவின் சடலத்தின் அருகிலேயே தங்கபாலன் அமர்ந்திருந்தார்.
திருச்செந்தூர் போலீசார், ரேணுகாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தங்கபாலனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.