கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான அய்யா வழிபாட்டாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர்.
ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 31-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என விழா நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.